அந்தமானில் முதல்முறையாக நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருவொற்றியூரைச் சேர்ந்த மாணவர்கள் 33 தங்கம் உள்பட 51 பதக்கங்களை வென்றனர்.
பிறகு சென்னை திரும்பிய அவர்கள் மெட்ரோ ரயிலில் திருவொற்றியூர் வந்திறங்கியபோது வரவேற்பளித்த மக்கள், வடிவுடையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.