மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் கூட்டம் ஜூன் 7-ஆம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காபந்து பிரதமராக உள்ள நரேந்திர மோடி உரையாற்ற உள்ள அக்கூட்டத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.