மருந்துகள், உடல் உறுப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வகையில் ஹெலிகாப்டர் போல் புறப்பட்டு, தரையிறங்கும் ட்ரோன் ஒன்றை பொறியியல் பட்டதாரி தினேஷ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
நோயாளிகளை கிராமங்களிலேயே வைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக சுமார் 7 கிலோ வரை மருந்துகளை சுமந்து மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளதாக தினேஷ் கூறினார்.