ஜம்மு காஷ்மீரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக 2 இடங்களையும், ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 2 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர்களான ஒமர் அப்துல்லா பாரமுல்லா தொகுதியிலும், மெஹ்பூபா முப்தி அனந்தநாக் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.
ஒமர் அப்துல்லாவை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல் ரஷீத் ஷேக் என்ற பொறியாளர் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டுகளாக டெல்லி சிறையில் உள்ளார்.