பிரிட்டனில் உள்ளதைப் போல செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக நோக்கில் செயல்படும் பராமரிப்பு மையங்கள் தகுதியில்லாத நபர்களை பராமரிப்பாளர்களாக நியமிப்பதால் செல்லப் பிராணிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இறந்து விடுவதாகக் கூறி சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்தது.