தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மொத்தமுள்ள 400 இடங்களில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது.
ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 87 இடங்களைப் பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதாகவும், பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பொருளாதார விடுதலைப் போராளிகள் உள்ளிட்ட கட்சிகள், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.
அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தால், 1994-க்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் அமையும் முதல் கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.