திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் கோணக்கரை பகுதியில் காசநோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த சிவக்குமார் என்ற நபர், தனது மனைவி செங்கொடியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவர் தூங்கும்போது அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
இதேபோல் மணப்பாறையில் தினசரி மது குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறு செய்த கணவன் வில்லியம்ஸ் தூங்கும்போது, அவரது தலையில் குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி அற்புதமேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.