தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இத்துடன், விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸாருடன், துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஒருங்கிணைப்புப் பணிக்காக கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலர் நந்தகுமார் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.