ராணுவத்தை ஈடுபடுத்தாமல் அமைதியான முறையில் தைவானை, சீனா உடன் இணைக்கும் முயற்சிக்கு அந்நிய சக்திகள் முட்டுக்கட்டை போட்டுவருவதாக, அமெரிக்கா மீது சீனா மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.
தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என உரிமை கோரிவரும் சீனா, கடந்த சில மாதங்களாக தைவான் அருகே தீவிர போர் ஒத்திகை மேற்கொண்டுவருகிறது.
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் பேசிய சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டோங் சான், தைவானில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சீனா உடனான பாரம்பரியத் தொடர்பை துண்டித்து,
பிரிவினைவாதத்தை ஊக்குவித்துவருவதாக குற்றம் சாட்டினார்.