​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கால்வாயை தூர்வாராத நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை

Published : Jun 01, 2024 5:57 PM

கால்வாயை தூர்வாராத நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை

Jun 01, 2024 5:57 PM

திருப்பத்தூர் அண்ணா நகரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கழிவு நீர் வாய்க்காலை முறையாக தூர்வாராதது ஏன் என நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.

ஆணையர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அவர், அவருக்கு மெமோ அளிக்க உத்தரவிட்டார்.

ஆதியூர் என்ற கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மழை நீர் தேங்கி கொசுப் புழு உருவாகி இருந்த பழைய இரும்புக் கடை ஒன்றின் உரிமையாளரை எச்சரித்தார்.