கன்னியாகுமரியில் 3 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். கடந்த 30ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நாளில், பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார்.
பகவதி அம்மன் கோயிலில் வழிபட்ட பிறகு விவேகானந்தர் பாறைக்கு படகில் பயணம் மேற்கொண்ட பிரதமர், அங்கு இன்று பிற்பகல் வரை 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
தியானத்தை முடித்துக் கொண்டு படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்குச் சென்ற பிரதமர், வள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து படகில் புறப்பட்டு கரையை அடைந்த பிரதமர், தனது கன்னியாகுமரி பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டார்