​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி மோசடி... வங்கி விபரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்: எஸ்.பி

Published : Jun 01, 2024 3:53 PM

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி மோசடி... வங்கி விபரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்: எஸ்.பி

Jun 01, 2024 3:53 PM

10-வது மற்றும் 12-வது தேர்ச்சி அடைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க உதவித் தொகை வழங்குவதாகக் கூறி, அவர்களது பெற்றோரிடம் தந்திரமாக ஜி-பே பின் நம்பரை வாங்கி மர்ம கும்பல் ஒன்று வங்கியில் உள்ள பணத்தை சுருட்டுவதாக தென்காசி மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தங்களுக்கு இதுவரை 2 புகார்கள் வந்துள்ளதாகவும், பண வசதி குறைவான குடும்பங்களை குறிவைத்து மோசடி அரங்கேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.