மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரியும், ஓட்டலுக்கு சீல்வைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் நகராட்சி நிலை அலுவலர்கள், மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக கட்டடத்தில் செயல்பட்டுவரும் பிரியாணி கடைக்கு ஆய்வுக்கு சென்றபோது, ஓட்டல் உரிமையாளர் மற்றும் சிலர் தங்களை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதாக சுகாதார ஆய்வாளர் பிருந்தா நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் கடை உரிமையாளர் அஃபில், அமீர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக நகராட்சி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நகராட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.