அமெரிக்காவில் சோகமாக காணப்படும் மருத்துவமனை வார்டில் சிரிப்பொலி சத்தம்
Published : Jun 01, 2024 8:14 AM
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கங்காரு குட்டி, மலைப்பாம்பு குட்டி, ஆமை, முள்ளம்பன்றி என விதவிதமான வன விலங்குகள் கொண்டு வரப்பட்டன.
800 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட விசேஷ விருந்தினர்களை சிறுவர்கள் தங்கள் உடல் நிலையை மறந்து கொஞ்சி மகிழ்ந்தனர். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை ஏக்கத்துடன் கவனித்துவரும் பெற்றோரால் சோகமாக காணப்படும் குழந்தைகள் வார்டில் சிரிப்பொலி நிரம்பி வழிந்தது.