வீடு கட்டுவதற்காக சவுடு மணல் அள்ளுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கமுதியை அடுத்துள்ள கீழ வில்லநேந்தல் பெண் வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
குமரவேல் என்ற விவசாயி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை வழங்கி போது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் வி.ஏ.ஓ.வை கையும் களவுமாக பிடித்தனர்.