கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளில் ரோந்து மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள அதிநவீன வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோப்லர் மற்றும் டொலிவோ ஆகிய இரண்டு வாகனங்கள் தூய்மை பணிகளுக்காகவும், சேரியாட் என்ற வாகனம் பாதுகாவலர்கள் ரோந்து பணிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
கோப்லர் என்ற வாகனத்தில் வேக்கம் கிளீனிங் முறையில் தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம்.
டொலிவோ என்ற வாகனத்தில் உள்அமர்ந்து கொண்டே தூய்மை பணிகளையும் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.