தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டியூரில் சிவன் என்பவரது மனைவி நந்தினி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளின் அழுகிய சடலங்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதே வீட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தம்பதியிடையே அடிக்கடி பிரச்சனை எழுந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் இவர்களுடன் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலை சிவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.
அப்போது நந்தினியும் 2 குழந்தைகளும் சடலமாகக் கிடந்துள்ளனர்.
தகவலறிந்து போலீசார் சென்றபோது சடலங்களின் அருகில் உணவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்துள்ளன.
மற்றொரு அறையில் சிவன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார்.
மனைவி, குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிட்டு தாம் மாட்டிக்கொள்வேம் என்பதால் சிவன் தாமும் விஷமருந்தினாரா என்பது அவர் உயிர் பிழைத்தால் மட்டுமே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.