குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதன் மூலம், மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தான் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த முயலும் போது அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு, அனுமதிக்க முடியாது என எதிர்க்கோஷம் எழுப்புவதாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன், பாரத் சேவாஷ்ரம் ஆகிய அமைப்புகளின் மீதும், அதன் சன்யாசிகள் மீதும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்திவருவதாகவும் அவர் விமர்சித்தார்.