திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத 1 லட்சத்து 57ஆயிரம் ரூபாயைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு ஆய்வாளர்கள் 7 பேர், ஊராட்சி அலுவலர்கள் 8 பேர் என மொத்தம் 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.