தருமபுரம் ஆதினத்தில் ஸ்ரீஞானபுரீஸ்வரர் கோயில் குருபூஜை விழாவின் பத்தாம் நாளான இன்று ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு குரு முகூர்த்தத்திற்கு எழுந்தருளி முந்தைய ஆதீனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்டவை முன்செல்ல தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீன மடாதிபதி குரு முகூர்த்தத்திற்கு எழுந்தருளினார்.