இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டில் ஏற்பட்ட லாகூர் பிரகடனத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்
Published : May 29, 2024 7:56 AM
இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டில் ஏற்பட்ட லாகூர் பிரகடனத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்
May 29, 2024 7:56 AM
இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டில் ஏற்பட்ட லாகூர் பிரகடனத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக நவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 1998 மே 28ஆம் தேதி பாகிஸ்தான் 4 அணுகுண்டு சோதனைகளை நடத்தியதாகவும் பிறகு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் வந்து லாகூர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகவும் நவாஸ் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாகவும் அது தவறு என்றும் நவாஸ் பேசினார்.