சென்னையில் விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிய சூரிய சக்தி மூலம் இயங்கும் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிகார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 5 ஸ்மார்ட் பேரிகார்டுகள் பரிசோதனை முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், அதிவேக பயணம் உள்ளிட்ட விதி மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து, அந்த தகவல்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் என்று கூறினர். அதன் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.