உக்ரைனில் உள்ள ரஷ்ய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உலகப் போர் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தினால், ரஷ்ய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி தெரிவித்த கருத்துக்கு மெத்வதேவ் இந்த எதிர்வினை ஆற்றியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ள மெத்வதேவ், உலகப் போரை தூண்டக்கூடிய எந்தச் செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்றும், அந்த வகையில் அந்நாடு மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.