வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்த தீவிர ரீமெல் புயல் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர் என்றும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மொகம்மது மொஹிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க ஆயிரத்து 471 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமான கூடாரங்கள் திறக்கப்பட்டு 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க 5,500 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.