​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புனே சிறுவன் மது அருந்தியது தொடர்பான விசாரணையில்... ரத்த மாதிரியை மாற்றியதாக தடயவியல் தலைவர் மற்றும் தலைமை மருத்துவர் கைது

Published : May 28, 2024 9:36 AM

புனே சிறுவன் மது அருந்தியது தொடர்பான விசாரணையில்... ரத்த மாதிரியை மாற்றியதாக தடயவியல் தலைவர் மற்றும் தலைமை மருத்துவர் கைது

May 28, 2024 9:36 AM

புனேவில், மதுபோதையில் சிறுவன் கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டு இளம் தம்பதி உயிரிழந்த நிலையில், சிறுவனின் ரத்த மாதிரியை குப்பையில் போட்டுவிட்டு வேறு ஒருவரின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியதாக தடயவியல் துறை தலைவர் கைது செய்யப்பட்டார்.

அரசின் சசூன் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிறுவனின் ரத்த மாதிரி, மது அருந்தி இருந்தாரா என்பதை அறிய இருவேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது.

ஒரு ஆய்வில் பாசிட்டிவ் என்றும் மற்றொரு ஆய்வில் நெகட்டிவ் என்றும் முடிவு வந்ததால், புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் நேரில் களத்தில் இறங்கி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஸ்ரீஹரி ஹல்னர் என்ற தலைமை மருத்துவர் ரத்த மாதிரியை மாற்றியதும், ரத்த மாதிரியை மாற்ற அறிவுறுத்தியது தடயவியல் துறை தலைவரான அஜய் தாவடே என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.