தமிழ்நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சிறப்பு வாகன தணிக்கையில் அபராதமாகவும், வரியாகவும் சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.
5 ஆயிரத்து 463 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அவற்றில் ஆயிரத்து 54 வாகனங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும்,
அவற்றில் 104 வாகனங்கள் கடும் குறைபாடுகளுக்காக விடுவிக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.