வங்கக் கடலில் உருவான தீவிர ரீமெல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசம் கடற்கரைப் பகுதியில், சாகர் தீவுகள் மற்றும் கெபுபாரா இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது கனமழையுடன் 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியதாக வானிலை மையம் தெரிவித்தது.
வங்க தேசத்தில் சுமார் 8 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.