பள்ளி மாணவர்களால் 3 நாட்களில் உருவாக்கப்பட்ட செயற்கை கோள்.. ஹீலியம் பலூன் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது
Published : May 26, 2024 2:59 PM
பள்ளி மாணவர்களால் 3 நாட்களில் உருவாக்கப்பட்ட செயற்கை கோள்.. ஹீலியம் பலூன் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது
May 26, 2024 2:59 PM
கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்து 3 நாட்களில் உருவாக்கிய செயற்கைகோள் ஹீலியம் பலூன் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளித்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக தனியார் அமைப்புகள் சார்பில் அன்னூரில் நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற 40 மாணவர்களால் இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி இங்கர்சால் வழிகாட்டுதலுடன் பூமியிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிற்கு விண்ணில் பயணிக்கும் வகையில் அந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டது. பூமியின் வெப்பம் மற்றும் பருவநிலையை கண்டறியும் வகையில் இந்த செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.