வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல்-ஃபாஷர் நகரில் சூடான் ஆயுதப் படைக்கும் அதிவிரைவு ஆதரவுப் படைக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 பொதுமக்கள் 17 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய அதிகார மோதலில் தொடங்கிய வன்முறையால் சுமார் 90 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ள நிலையில், பட்டினியால் தவித்து வருகின்றனர்.
தலைநகர் கோர்டாமில் 2000ஆம் ஆண்டுகளில் தொடங்கிய வன்முறையில் மேற்கு சூடான் நகரங்களை அதிவிரைவு ஆதரவுப் படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், கடைசி நகராக எல்-ஃபாஷரை கைப்பற்ற கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.