சமூக ஊடகங்களில் 'மீம்'கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான கபோசு நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. 'ஷிபா இனு' ரகத்தைச் சேர்ந்த இந்த நாயின் புகைப்படங்களை 2010-ஆம் ஆண்டு வைரல் ஆகின.
அதன் வெவ்வேறு முக பாவனைகளை சூழலுக்கு தகுந்தாற்போல் மீம் கிரியேட்டர்கள் பயன்படுத்திவந்தனர்.
எலான் மஸ்க், டுவிட்டர் தளத்தை வாங்கியபோது, பறவைக்கு பதிலாக கபோசுவின் படத்தை லோகோவாக மாற்றினார்.
2022-ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதியுற்றுவந்த கபோசு உயிரிழந்துவிட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.