மணியே... மணியின் ஒலியே.. இவங்கல்லாம் சிறப்பு விருந்தினரா.. திசைமாறும் கல்லூரி விழாக்கள்..! இன்ஸ்டா இம்சைகளின் அலப்பறை
Published : May 24, 2024 10:06 PM
மணியே... மணியின் ஒலியே.. இவங்கல்லாம் சிறப்பு விருந்தினரா.. திசைமாறும் கல்லூரி விழாக்கள்..! இன்ஸ்டா இம்சைகளின் அலப்பறை
May 24, 2024 10:06 PM
கல்லூரி விழாக்களுக்கு யூடியூப்பர்களையும், இன்ஸ்டாகிராம் பிரபலங்களையும் அழைத்து கவுரவிக்கும் கல்லூரிகளுக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்டா பிரபலம் ஒருவரின் வில்லங்க வீடியோ வெளியான நிலையில் இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இவர் யார் என்று இன்ஸ்டாகிராமம் பக்கம் செல்லாத பலருக்கும் கேள்வி எழலாம்...
கல்லூரி மாணவிகள் புடை சூழ செல்ஃபி எடுத்த படியே கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வரப்படும் இவர் தான் இன்ஸ்டா இம்சை அரசன் “மணி ஓசை” மணி..!
முன்பெல்லாம் இவரை போன்ற ஒருவர் கல்லூரி முன்பு சில வினாடிகள் நின்றாலே ஈவ் டீசிங் வழக்கில் போலீசார் அள்ளிச்சென்று விடுவர். ஆனால் இப்போது இவர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர் என்றால் அந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் அங்குள்ள மாணவிகளின் ரசனையை என்ன சொல்வது ?! என்று தலையில் அடித்து கொள்கின்றனர் கல்வியாளர்கள்
பல்துறை வித்தகர்களையும், கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்த ஆளுமைகளையும் சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரிக்கு அழைத்து பேச வைத்தால், அவர்களிடம் இருந்து பல பயனுள்ள நல்ல கருத்துக்கள் மாணவர்களுக்கு கிடைக்கும். இதில் பலரது கருத்துக்கள் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தரும் வகையிலும் இருக்கும்
சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கிகிடக்கும் இன்றைய இளைய சமூதாயம் இன்ஸ்டாகிராமில் மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் ஊதாரிகளை எல்லாம் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கும் நிலையில் சில கல்வி நிலையங்கள் உள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
அண்மையில் கல்லூரி விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக கூட்டிச்செல்லப்பட்ட இன்ஸ்டா பிரபலமான ரசிகனின் ரசிகன் மணி என்பவர் தனது ரசிகையுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் வில்லங்கமாக தோன்ற , அந்த வீடியோ வைரலாகி, மணிக்கு எதிராக நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
தங்கள் கல்லூரி விழா குறித்த தகவல் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காக யூடியூப்பர்களையும், இன்ஸ்டா இம்சைகளையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பதை தவிர்த்து, கண்ணியமிக்க மனிதர்களை அழைத்து மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.