ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பருவநிலை மாற்றத்தால் ரோஜா பூ அறுவடை தீவிரம்
Published : May 24, 2024 8:28 PM
ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பருவநிலை மாற்றம் சாதகமாக அமைந்ததால் ரோஜா பூ அறுவடை குறிப்பிட்ட காலத்துக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அழகு சாதனத் தொழிலில் பயன்படுத்தப்படும் நறுமணமுள்ள ரோஜா எண்ணெய் உற்பத்தியில் பல்கேரியா முதலிடத்தில் உள்ள நிலையில், நடப்பு பருவத்தில் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பல்கேரியாவில் ஆண்டுதோறும் 2 முதல் மூன்றரை டன் ரோஜா எண்ணெய்யும், ரோஸ் வாட்டர், ரோஸ் ஜாம், ரோஸ் டீ, ரோஸ் பிராந்தி உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.