கோடை விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளதால், இலவச தரிசன வரிசையில் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை 6 மணிக்கு இலவச தரிசனத்திற்கான அனுமதி துவங்கிய நிலையில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.