திருநெல்வேலியில், கடந்த 20ஆம் தேதி காதலி கண் முன் ரவுடி தீபக்ராஜா வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபக்ராஜா வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், தற்போது, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபக்ராஜா வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 15 பேருக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை கூண்டோடு பிடிக்க 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பணியாற்றி, இடமாறுதலில், தற்போது வேறு இடங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசாரை, வழக்கு விசாரணைக்கு உதவிட வருமாறு, காவல் ஆணையர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து 4ஆவது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.