​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்து ஓட்டுனர்களை போலீசார் பழிவாங்குகிறார்கள்.. ஓசி டிக்கெட் விவகாரம்.. விஸ்வரூபம்..!

Published : May 24, 2024 8:20 AM



அரசு பேருந்து ஓட்டுனர்களை போலீசார் பழிவாங்குகிறார்கள்.. ஓசி டிக்கெட் விவகாரம்.. விஸ்வரூபம்..!

May 24, 2024 8:20 AM

அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று கூறிய விவகாரத்தின் தொடர்ச்சியாக, போலீசார் திட்டமிட்டு ஓட்டுனர்கள் மீது அபராதம் விதித்து பழி வாங்குவதாக அண்ணா தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது 

போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் காட்சிகள் தான் இவை..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிர்புற சாலையில் அரசு பேருந்தை ஓட்டுனர் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தியுள்ளார்.

சாலை விதிகளை மீறியதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தியதற்காக 500 ரூபாய், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக 500 ரூபாய் என மொத்தம் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் புதுச்சேரியில் இருந்து அதிக பயணிகளை ஏற்றி வந்ததாக அரசு பேருந்துகளுக்கு போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முறையாக சீருடை அணிகிறார்களா என்றும் கண்காணித்து விதி மீறல் புகார்கள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது

அரசு பேருந்தில் காவலரிடம் பயணச்சீட்டு வாங்கச் சொன்ன காரணத்தால், பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கைகளை போலீசார் செய்து வருவதாக விமர்சித்துள்ளார் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலகண்ணன்

போலீசார், போக்குவரத்து கழக ஊழியர்களின் மோதலுக்கு மூல காரணமான பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஆறுமுகபாண்டியிடம் , உயர் காவல் அதிகாரி விசாரணை நடத்திய நிலையில் மயக்கம் அடைந்ததாகக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்