​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்லோ டேப் தயாரிக்கும் குடோனில் இரவு திடீர் தீ விபத்து

Published : May 24, 2024 7:26 AM

செல்லோ டேப் தயாரிக்கும் குடோனில் இரவு திடீர் தீ விபத்து

May 24, 2024 7:26 AM

சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே செயல்பட்டு வந்த செல்லோ டேப் தயாரிக்கும் குடோனில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பெயின்டிற்கு பயன்படுத்தும் தின்னர் மற்றும் டேப்பிற்கு பயன்படுத்தப்படும் பிஸின்கள் உள்ளே இருந்ததால் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

பல்வேறு பகுதிகளிலிருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இரவு நேரத்தில் குடோனில் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.