சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 3 மணி நேரம் இடி, மின்னல் உடன் கனமழை பெய்தது.
பணி முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த தொழிலாளர்கள், பாதி கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட கட்டடத்தில் மழைக்காக ஒதுங்கியபோது அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 6 தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.