தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பாலாறு கடந்த சில மாதங்களாக வறண்டு மணல் திட்டுகளாக காணப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
யானைகளும், மான்களும் தண்ணீர் தேடி அடிக்கடி கிராம பகுதிகளுக்கு வந்த நிலையில், தற்போது அவற்றின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பாலாற்று வெள்ளத்தால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.