​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பல் மருத்துவ கல்லூரி பெண்கள் விடுதிக்குள் புகுந்து திருட்டு 3 பேர் கைது..

Published : May 24, 2024 6:56 AM

அரசு பல் மருத்துவ கல்லூரி பெண்கள் விடுதிக்குள் புகுந்து திருட்டு 3 பேர் கைது..

May 24, 2024 6:56 AM

சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி பெண்கள் விடுதிக்குள் புகுந்து 6 செல்போன்கள் திருடிய நபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் தேதி திருட்டு நடந்த போது பதிவான சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த பூக்கடை போலீசார், செல்போன்களை திருடிய கார்த்திக் ராஜா என்ற கொசு கார்த்திக் என்ற நபரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து செல்போன்களை வாங்கி விற்றதாக செல்போன் கடை நடத்தி வரும் நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.