சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரைவேலை நிறுத்தம் மேற்கொள்வதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சரவெடி செய்யும் சிறிய தொழிற்சாலைகளை குறிவைத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி மூடி வருவதாக குற்றம்சாட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.