தொடர் மழை காரணமாக திருப்பூர், கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக, மழை காலமான அக்டோபர், நவம்பரில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், காலநிலை மாற்றத்தால் தற்போதே டெங்கு பாதிப்புகள் அதிகரித்துவருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 மாதங்களில் 4,400-க்கும் மேற்பட்டோர் டெங்கு-வால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.