முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் 1,460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.