சிவகாசியில் தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க வருவாய், காவல், தீயணைப்பு, தொழிலக பாதுகாப்புத் துறை அதிகாரிகள்அடங்கிய 9 ஆய்வுக் குழுக்கள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றன.
இந்த ஆய்வில் விதிமுறைகளை மீறியதாக 24 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆய்வுக் குழு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து 24 ஆலைகள் மூடப்பட்டன. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.