​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அண்ணா மேம்பாலத்தில் வலப்பக்க இண்டிகேட்டரை ஒளிரவிட்டு இடப்பக்கம் திரும்பிய கார்... பின்னால் சென்ற கார் மோதியதால் கைகலப்பு என தகவல்

Published : May 23, 2024 2:39 PM

சென்னை அண்ணா மேம்பாலத்தில் வலப்பக்க இண்டிகேட்டரை ஒளிரவிட்டு இடப்பக்கம் திரும்பிய கார்... பின்னால் சென்ற கார் மோதியதால் கைகலப்பு என தகவல்

May 23, 2024 2:39 PM

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, காரின் வலது பக்க இண்டிகேட்டரை ஒளிரவிட்டு, இடது பக்கம் திரும்பிய காரின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்படுத்தியது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்ததுடன், கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், மது போதையில் காரை இயக்கினார்களா என இரண்டு கார் ஓட்டுநர்களிடமும் போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.