சென்னை போர் நினைவு சின்னம் அருகே மயிலாப்பூரைச் சேர்ந்த கல்யாணி என்பவரும் அவரது மகனும் சென்ற காரின் இடது பக்க முன் டயர் வெடித்து, சாலையோர தடுப்பில் மோதி கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
காரில் இருந்த பாதுகாப்பு பலூன் விரிந்ததால் தாயும் மகனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் கார் கதவை உடைத்து இருவரையும் மீட்டனர்.