ஸ்கைப் செயலி அல்லது வீடியோ கால் மூலமாக போலீஸார் விசாரணை செய்ய மாட்டார்கள் என்பதால் இதுபோன்ற போலியான விசாரணைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
கொரியர் நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி, தங்களது பெயரிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள போலீஸார், அடையாளம் தெரியாத நபர்களிடம் வங்கி சார்ந்த மற்றும் தனிப்பட்ட விபரங்களை தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண் 1930-திற்கு தெரிவிக்கும் படி தெரிவித்துள்ளார்.