திருப்பதியில் சத்திரம் ஒன்றை கட்டி அதில் திருமண மண்டபமும் அமைத்து தெலங்கானா பக்தர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அவர் வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு ஆந்திராவில் பொறுப்பேற்ற பின் இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.