​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் வாக்குவாதம்... வாரண்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை

Published : May 22, 2024 2:32 PM

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் வாக்குவாதம்... வாரண்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை

May 22, 2024 2:32 PM

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த காவலரின் வீடியோ வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய ஆறுமுகப் பாண்டி என்ற அந்தக் காவலர், "உங்க ஆட்களை மட்டும் டிக்கெட் இல்லாம கூட்டிட்டு போறீங்க, நானும் அரசாங்க ஊழியர்தான், அதனால் டிக்கெட் எடுக்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.

வாரண்ட் வேண்டும் என சக காவலர் ஒருவர் அறிவுறுத்தியும் கேட்காத ஆறுமுகப் பாண்டி, தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், காவலருக்காக தாமே டிக்கெட் எடுத்தார்.

இந்த நிலையில், வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று கூறியுள்ள போக்குவரத்து செயலாளர், ஆறுமுகப் பாண்டி மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.