பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் மற்றும் 33 கால்வாய்கள், மழைநீர் வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மண்டலத்துக்கு 50 லட்ச ரூபாய் செலவில் மொத்தம் ஆயிரத்து 480 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்களைத் தூர்வாரும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணிக்கு வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய ஆம்பிபியன்ஸ், ரோபோடிக் எஸ்கவேட்டர் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜூன் 30ஆம் தேதிக்குள் முதல் கட்ட பணிகள் முடிக்கப்படும் என்றும், அக்டோபருக்குள் இத்திட்டம் முழுமையாக செய்து முடிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.