​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ: சி.சி.டி.வி பதிவு..

Published : May 22, 2024 8:02 AM

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ: சி.சி.டி.வி பதிவு..

May 22, 2024 8:02 AM

ஆந்திராவில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைக்கும் சி.சி.டி.வி.பதிவு வெளியாகி உள்ளது.

பல்நாடு மாவட்டத்திலுள்ள பல்வாய்கேட் என்ற வாக்குச்சாவடியில் மச்செர்லா தொகுதி எம்.எல்.ஏவான பின்னேலி ராமகிருஷ்ணா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் நுழைந்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் இயந்திரத்தை உடைத்ததாகவும், இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.